/* */

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்- ரூ.62 லட்சம் அபராதம் வசூல்

ஈரோடு மாவட்டத்தில், ஊரடங்கை மீறிய 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் மற்றும் ரூ.62 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் கொரோனா 2 -வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூன் 14-ஆம் தேதி வரை தளர்வுடன் முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட எல்லையில் உள்ள 13 நிலையான சோதனைச் சாவடிகளிலும், 42 கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முழு ஊரடங்கை பொருட்படுத்தாமல் வழக்கம் போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சுற்றி திரிவோரை, பிடித்து காரணங்களை விசாரித்து, தேவையின்றி வெளியே வருவது தெரிந்தால் அபராதம் விதிக்கின்ற்னார்.

இதுகுறித்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறி சுற்றும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறோம். இ-பதிவு இன்றி வெளியே சுற்றுபவர்கள் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர தேவையின்றி வெளியே சுற்றும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு விடுகிறது.

இதுவரை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ 62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து வீட்டில் இருக்க வேண்டும். இவர் அவர் கூறினார்.

ஊரடங்கின் 13-வது நாளான நேற்று, மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 330 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 974 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 912 இருசக்கர வாகனங்கள் 23 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று மட்டும் ரூ.4.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 6 Jun 2021 8:26 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!