/* */

ஈரோட்டில் கொளுத்திய வெயில் 109.4 டிகிரியுடன் மாநிலத்தில் டாப்

Erode news- தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) இன்று 109.4 டிகிரி வெயில் பதிவானது.

HIGHLIGHTS

ஈரோட்டில் கொளுத்திய வெயில் 109.4 டிகிரியுடன் மாநிலத்தில் டாப்
X

Erode news- கொளுத்தும் வெயில் (மாதிரிப் படம்).

Erode news, Erode news today- தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) இன்று 109.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடந்த பிப்ரவரி முதல் வாரத்திலேயே, தமிழ்நாட்டில் முதல் முறையாக ஈரோட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. தொடர்ந்து, நாள்தோறும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் குறையாமல் கடந்த 2 மாதங்களாக வெயில் தகித்து வருகிறது. இதில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஈரோட்டில் அதிகபட்சமாக 107.6 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 19ம் தேதி) வெள்ளிக்கிழமை உச்சபட்ச வெயில் உக்கிரம் காட்டியது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக, 109.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அனலடித்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இன்று கொளுத்திய வெயிலால் மக்கள் வெளியே நடமாட முடியவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடியது.

குளிர்பான கடைகளை தேடி மக்கள் படையெடுத்தனர். இளநீர், தர்பூசணி குளிர்பானங்கள் விற்பனை சூடு பிடித்தது. இரவிலும் அனல் தெறிந்தது. மின் விசிறிகளும் அனல்காற்றை கக்கியதால் மக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், கடுமையான அனல் வெப்ப அலையால் குழந்தைகள், முதியவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, இன்று மாலை தாளவாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழையும், ஈரோடு ரயில்வே காலனி பகுதியில் சாரல் மழையும் பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 19 April 2024 1:00 PM GMT

Related News