/* */

மாணவர்களுக்கு குறித்த காலத்தில் சீருடைகள் அனுப்ப வேண்டும் : அமைச்சர் காந்தி உத்தரவு

தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

மாணவர்களுக்கு குறித்த காலத்தில் சீருடைகள் அனுப்ப வேண்டும் : அமைச்சர் காந்தி உத்தரவு
X

தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் அமைச்சர் காந்தி, அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டனர்.

ஈரோடு அடுத்துள்ள அசோகபுரத்தில் தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தற்போது பள்ளி மாணவ மாணவியர்களுக்கான சீருடை உற்பத்தி மற்றும் பதனிடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தமிழக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி மற்றும் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பள்ளி மாணவ மாணவிகளின் சீருடை துணிகளின் தரம் , உற்பத்தி செய்யும் அளவுகள் , பதனிடும் முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பள்ளி சீருடைகள் தயாரிப்பில் ஈடுபடும் பணியாளர்கள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் குறித்த காலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இந்ந ஆய்வின் போது ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி , கைத்தறித்துறை செயலர் பீலா ராஜேஷ் உட்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்.



Updated On: 30 Jun 2021 9:11 AM GMT

Related News