/* */

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு நாள்: ஈரோடு காங்கிரஸ் சார்பில் அஞ்சலி

Indira Gandhi Memorial -இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார்.

HIGHLIGHTS

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு நாள்: ஈரோடு காங்கிரஸ்  சார்பில் அஞ்சலி
X

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக இந்தியாவின் முதல் பெண் பிரதமர் மறைந்த இந்திரா காந்தியின் 39 ஆவது ஆண்டு நினைவு நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Indira Gandhi Memorial -ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக இந்தியாவின் முதல் பெண் பிரதமர் மறைந்த இந்திரா காந்தியின் 39 ஆவது ஆண்டு நினைவு நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி, பெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார். பின்னர் சுருக்கமாக இந்திரா காந்தியாக மாறினார் .இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர், ஜனவரி 19 1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980-இல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984-இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.

இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார்.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை அன்னை இந்திரா காந்தி அவர்களின் 39 ஆவது ஆண்டு நினைவு நாள் அஞ்சலி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி. திருச்செல்வம் தலைமையில் இன்று 31 10 2022 காலை 10 மணி அளவில் ஈ.வி.கே.சம்பத் சாலையில் மண்டல தலைவர் ஆர் விஜயபாஸ்கர் மாநில பொதுக்குழு உறுப்பினர் தீபா ஆகியோர் முன்னிலையில் ஈரோடு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ. ஆர். ராஜேந்திரன்,. இந்திரா காந்தியின் உருவ திரைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ம.முகமது அர்சத் பயங்கரவாத உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் எம் ஜவஹர் அலி, தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி எம் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் பாபு என்கிற வெங்கடாஜலம், எம் ஆர் அரவிந்த தாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் பி. ஆறுமுகம், முன்னாள் நகரத் தலைவர் குப்பண்ணா சந்துரு, மாவட்ட சேவா தள தலைவர் எஸ் முகமது யூசுப், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே என் பாஷா.

மூன்றாம் மண்டல சிறுபான்மை துறை தலைவர் சூர்யா சித்திக், நிர்வாகிகளான கே.ஜெ.டிட்டோ, ராஜாஜிபுரம் சிவா, குமரேசன், சதீஷ், சூரம்பட்டி விஜயகுமார், வள்ளிபுரத்தான் பாளையம் எஸ். தங்கவேலு, நடராஜ் செட்டியார், சிவாஜி கணேசன், வேன் ராமசாமி, என் சி டபிள்யூ சி மாவட்ட தலைவி ஆர் கிருஷ்ணவேணி, மகிளா காங்கிரஸ் நிர்வாகி எம்.பேபி உட்பட பலர் திரளாக கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Nov 2022 5:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...