/* */

கோவை சரக டிஐஜி ஈரோட்டில் ஆய்வு

Coimbatore Freight DIG Inspection in Erode

HIGHLIGHTS

கோவை சரக டிஐஜி  ஈரோட்டில்  ஆய்வு
X

திறம்பட செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழை கோவை சரக டிஐஜி முத்துசாமி வழங்கினார். 

ஈரோடு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்தும், கண்டறியப்பட்ட குற்ற வழக்குகளின் நிலை குறித்தும், கோவை சரக டிஐஜி முத்துசாமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து, பல்வேறு குற்ற வழக்குகளில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்த, 97 போலீஸ் அதிகாரிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.தொடர்ந்து, 40 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் குறைகளை கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

நடப்பாண்டில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 201 குற்ற வழக்குகளில் 152 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 183 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்றதாக 103 வழக்குகளில், 159 பேரை கைது செய்து, 59 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லாட்டரி விற்றதாக 48 வழக்குகளில், 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூதாடியதாக, 285 பேர் மீது, 57 வழக்குகள் பதிவு செய்து, 89 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 12 Jun 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  5. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  6. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  8. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  9. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!