/* */

கோவில்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு பொதுமக்கள் வழிபட தடை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு பொதுமக்கள் வழிபட தடை.

HIGHLIGHTS

கோவில்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு பொதுமக்கள் வழிபட தடை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆடி மாதம் முழுவதும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகளவு கோயில்களில் கூட்டம் கூடுவதன் காரணத்தால் இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் மக்கள் கோவில்களில் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் கோவில்களில் வெளியிலேயே நின்று சாமி கும்பிட்டு சென்றனர். இந்நிலையில் ஆடி மாதம் முடிந்தும் மீண்டும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பொதுமக்கள் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கோபி கொண்டத்துக்காளியம்மன் கோவில், ஈரோடு மாநகரில் புகழ்பெற்ற ஈஸ்வரன் கோவில்கள் , பெரிய மாரியம்மன் கோவில் நடைகள் சாத்தப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் சாமி கும்பிட வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு சில மக்கள் கோவில் வெளியே நின்று சாமி கும்பிட்டு விளக்கேற்றி வழிபட்டு சென்றனர்.

Updated On: 3 Sep 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்