/* */

ஈரோட்டில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, மாபெரும் விழிப்புணர்வு பேரணி

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர் கூட்டமைப்பு சார்பில், மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோட்டில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, மாபெரும் விழிப்புணர்வு பேரணி
X

உலக ரத்த கொடையாளர் தினத்தையொட்டி, ஈரோடு ஆட்சியர் அலுவலகம் அருகே தொடங்கிய மாபெரும் விழிப்புணர்வு பேரணி.

ஜூன் மாதம் 14-ம் தேதி உலக ரத்த தான தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ரத்த தானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர் கூட்டமைப்பு சார்பாக, மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். செயலாளர் கவியரசு தலைமை வகித்தார். துணைத் தலைவர் சதீஸ்குமார், பொருளாளர் மோகன்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்பேரணியை மணியன் மெடிக்கல் சென்டர் மருத்துவர் செந்தில்குமார், மரம் பழனிச்சாமி, திமுக மாணவர் அணி மாநில துணை செயலாளர் வீரமணி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இப்பேரணியானது, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி, ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நிறைவடைந்தது.

இதில் பல்வேறு கல்லூரியை சார்ந்த நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படைகள் மாணவர்கள் மற்றும் ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பு சார்ந்த ரத்தக் கொடையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 15 Jun 2023 2:15 AM GMT

Related News