/* */

அந்தியூரில் இடி-மின்னலுடன் கன மழை

அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் கன மழை கொட்டியது. அதனால் மழைநீர் பெருக்கெடுத்து தாழ்வான பகுதிகளில் ஓடியது.

HIGHLIGHTS

அந்தியூரில் இடி-மின்னலுடன் கன மழை
X

நிரம்பி வரும் கெட்டிசமுத்திரம் ஏரி

அத்தாணி, ஆப்பக்கூடல், நகலூர், பெருமாபாளையம், செல்லம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை இடி-மின்னலுடன் கன மழை கொட்டியது.

அதனால் மழைநீர் பெருக்கெடுத்து தாழ்வான பகுதிகளில் ஓடியது.பர்கூர் மலைப்பகுதியிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி பர்கூர் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

தொடர் மழையால் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேறி 17.5 அடி உயரமுடைய கெட்டிசமுத்திரம் ஏரிக்கு செல்கிறது. இதனால் நேற்று 14 அடி உயரம் இருந்த அந்த ஏரி நீர்மட்டம் இன்று 14.50 அடி உயரமாக அதிகரித்து உள்ளது. இதேபோல் தொடர்ந்து மழை பெய்தால் விரைவில் கெட்டிசமுத்திரம் ஏரி முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 13 Nov 2021 4:30 PM GMT

Related News