/* */

அந்தியூர் விற்பனைக்கூடத்தில் ரூ.10 லட்சத்துக்கு விளைபொருள் விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

HIGHLIGHTS

அந்தியூர் விற்பனைக்கூடத்தில் ரூ.10 லட்சத்துக்கு விளைபொருள் விற்பனை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த 5,848 தேங்காய்கள், குறைந்த விலையாக 5 ரூபாய் 41 பைசாவிற்கும், அதிக விலையாக 15 ரூபாய் 51 பைசாவிற்கும், 7 மூட்டைகள் ஆமணக்கு கிலோ 72 ரூபாய் 39 பைசாவிற்கும்,57 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 74 ரூபாய் 89 பைசா முதல் 93 ரூபாய் 50 பைசா வரையிலும், 7 மூட்டைகள் அவரை கிலோ 72 ரூபாய் 16 பைசாவிற்கும், 14 மூட்டைகள் கொள்ளு கிலோ 42 ரூபாய் 12 பைசாவிற்கும் விற்பனையாகின.

மேலும், 1 மூட்டை பாசிப்பயறு கிலோ 98 ரூபாய் 85 பைசாவிற்கும், 1 மூட்டை தட்டைபயிறு கிலோ 62 ரூபாய் 22 பைசாவிற்கும், 3 மூட்டைகள் உளுந்து கிலோ 67 ரூபாய்‌ 15 பைசாவிற்கும், 5 மூட்டைகள் நரிப்பயிறு கிலோ 102 ரூபாய் 97 பைசாவிற்கும், 150 மூட்டைகள் துவரை கிலோ 56 ரூபாய் 29 பைசாவிற்கும் விற்பனையானது. மொத்தம் 190.57 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் ஒன்பது லட்சத்து 87 ஆயிரத்து 549 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 15 March 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்