/* */

திண்டுக்கல் அருகே கண்மாயில் தண்ணீர் திறக்க கோரி கடையடைப்பு போராட்டம்

திண்டுக்கல் அருகே கண்மாயில் தண்ணீர் திறக்க கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.

HIGHLIGHTS

திண்டுக்கல் அருகே கண்மாயில் தண்ணீர் திறக்க கோரி கடையடைப்பு போராட்டம்
X

கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள விருவீடு பகுதியில் கண்மாய் பாசனம் மூலம் முருங்கை, அவரை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள கண்மாய்களில் 58 கிராம கால்வாயில் இருந்து வரும் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர்.

இங்கு போதிய மழை இல்லாததால் தற்போது கண்மாய் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தாங்கள் பயிரிட்ட முருங்கை, அவரை, வாழை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி வாடி வருவதாக வேதனை தெரிவித்தனர். எனவே கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் 58 கிராம கால்வாயில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் தேக்க வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விருவீட்டில் இன்று கடையடைப்புபோராட்டம் நடைபெற்றது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.கடையடைப்பு போராட்டம் குறித்து ஏற்கனவே விவசாயிகள் அறிவிப்பு செய்திருந்ததால் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியபொருட்களை ஏற்கனவே வாங்கி வைத்திருந்தனர். மேலும் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

Updated On: 7 Dec 2023 4:29 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  7. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?