/* */

உள்ளாட்சித் தேர்தலில் 9 மாவட்டங்களில் போட்டியிட சமக ஆர்வம்: சரத்குமார்

உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை 9 மாவட்டங்களில் போட்டியிட சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்வம் காட்டி வருவதாக சரத்குமார் பேட்டி

HIGHLIGHTS

உள்ளாட்சித் தேர்தலில் 9 மாவட்டங்களில் போட்டியிட சமக ஆர்வம்: சரத்குமார்
X

திண்டுக்கல்லில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நாதன் இல்லத் திருமண விழாவில் சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் திண்டுக்கல்லில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நாதன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார், பின்னர் சரத்குமார் செய்தியாளரிடம் பேசுகையில்,,

திமுக அரசு பதவியேற்று ஆறு மாதங்கள் ஆன பிறகுதான் அவர்கள் செயல்பாடு குறித்து கூற முடியும் அந்தவகையில் அவர்கள் கடந்த ஆண்டுகளை விட என்ன சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ அவற்றை செய்ய அவர்களுக்கு ஆறு மாத காலம் அவகாசம் தேவைப்படும் அதன் பிறகு திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து கூற முடியும்,

மத்திய அரசு தமிழக முதலமைச்சரின் தேவையான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள செவிசாய்க்க வேண்டும் கொடநாட்டில் அசம்பாவிதம் நடந்துள்ளது உண்மை அதை யாரும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது. அதில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுவதற்கு ஏன் பயப்பட வேண்டும் நியாயமான முறையில் எல்லோரும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் தானே அவர்களை விசாரணை நடத்துவதில் தவறில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பு குறித்து மீண்டும் விசாரணை நடத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்

உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை 9 மாவட்டங்களில் போட்டியிட சமக வினர் ஆர்வம் காட்டி மனுக்கள் கேட்டு வருகின்றனர். மக்களுக்கு யார் யாரெல்லாம் சேவை செய்ய நினைக்கிறார்களோ அவர்களை போட்டியிட வேண்டும் என்று கூறி இருக்கிறேன் மக்கள் பணி செய்ய வேண்டிய பதவிக்காக உள்ளாட்சி அமைப்பு இருப்பதால் அதை கட்சிக்கு அப்பாற்பட்டு நான் பார்க்கிறேன்

நேரடியாக மக்களிடம் தொடர்பு வைத்துக் கொள்பவர்கள் நிச்சயமாக தேர்தலில் நிற்பார்கள் அந்தந்தப் பகுதிகளில் நிர்வாகிகள் கூட்டணியுடன் சேர்ந்து நிற்பதாக கூறினால் அது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Updated On: 9 Sep 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!