/* */

குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை: நலம் விசாரித்த எஸ்பி

பஸ்ஸ்டாப் அருகேயுள்ள குப்பைத் தொட்டியின்‌ உள்ளே இருந்த ஒரு பையிக்குள் இருந்து குழந்தையின் சப்தம் வருவது தெரியவந்தது.‌

HIGHLIGHTS

குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை:  நலம் விசாரித்த  எஸ்பி
X

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் விசாரித்த மாவட்ட எஸ்பி

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் குப்பைத்தட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தையை பாதுகாப்புடன் ஆரோக்கியமாக உள்ளதா என காவல் கண்காணிப்பாளர் நலம் விசாரித்தார்.

ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையை அடுத்த மார்க்கம்பட்டி பஸ் நிறுத்தத்தில் கடந்த 22ம் தேதி இரவு 8 மணிக்கு சிலர் பேருந்துக்காக காத்திருந்தனர்.‌ அப்போது அருகில் இருந்த குப்பைத் தொட்டிக்குள இருந்து குழந்தை அழும் சப்தம் கேட்டது.

உடனே அங்கு இருந்தவர்கள் அருகில் சென்று பார்த்தனர். அப்போது குப்பைத் தொட்டியின்‌ உள்ளே இருந்த ஒரு பையிக்குள் இருந்து குழந்தையின் சப்தம் வருவது தெரியவந்தது.‌ இதனால் பையை எடுத்து பார்த்த போது, அதற்குள் பச்சிளம் பெண் குழந்தை துணியால் சுற்றப்பட்டு இருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அந்தக் குழந்தையின் தொப்புள் கொடி கூட வெட்டப்படாமல் அப்படியே இருந்தது. இதனால் அந்த குழந்தை பிறந்து சில மணி நேரமே ஆகி இருப்பது தெரியவந்தது. இதுபற்றி இடையகோட்டை போலீசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் போலீஸார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் பெண் குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. மேலும் குழந்தையை குப்பையில் வீசிய பெண்ணை இடையகோட்டை போலீஸார் தேடி வந்த நிலையில், குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிய அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், ஏடிஎஸ்பி லாவண்யா ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் வந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளதா? என்பதை அறிய மருத்துவ பரிசோதனை செய்ய மருத்துவ குழுவினருக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் குழந்தையை பார்வையிட்ட போலீஸ் சூப்பிரண்டு, குழந்தையின் உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

Updated On: 25 Jan 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்