/* */

பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தர்மபுரி மருத்துவமனைக்கு வருகை

ராஜூவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று, பரோலில் உள்ள பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக தர்மபுரிக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தர்மபுரி மருத்துவமனைக்கு வருகை
X

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட பேரறிவாளன்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறை கைதியாக உள்ள பேரறிவாளன் பரோலில் வந்து தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் இருந்து வருகிறார். தொடர்ந்து பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் பேரறிவாளன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பேரறிவாளனுக்குத் தமிழக அரசு பரோலை நீட்டித்து வருகிறது. மேலும் பரோலில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் தொடர்ந்து கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கு ஸ்கேன் எடுப்பதற்காக தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்திருந்தார். ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் டி.எஸ்.பி., வெங்கடகிருஷ்ணன் தலைமையில் ஒரு உதவி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 10 காவல் துறையினர் பாதுகாப்புடன் தர்மபுரியில் உள்ள தருமபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் ஸ்கேன் சென்டருக்கு அழைத்து வரப்பட்டார்.

அப்போது பேரறிவாளனுடன் அவரது தாயார் அற்புதம்மாள் வந்திருந்தார். தொடர்ந்து பலத்த காவலர்கள் பாதுகாப்புடன் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யபட்டது. தொடர்ந்து சிறுநீரகம் தொடர்பாக அருகில் உள்ள மற்றொரு தனியார் மருத்தவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தொடர்ந்து 2 மணியளவில் பரிசோதனைகள் முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, இதே மருத்துவமனைக்கு பேரறிவாளன் வந்து உடல் பரிசோதனை செய்து கொண்டார். தொடர்ந்து பேரறிவாளன் சிகிச்சைக்காக வந்ததால், தருமபுரி நகர் பகுதியில் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 8 Feb 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!