/* */

தர்மபுரியில் மாரத்தான் ஓட்டம் கலெக்டர் திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தர்மபுரியில் மாரத்தான் ஓட்டம் கலெக்டர் ச.திவ்யதர்சினி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

தர்மபுரியில் மாரத்தான் ஓட்டம் கலெக்டர் திவ்யதர்சினி  கொடியசைத்து தொடங்கி வைத்தார்
X

தர்மபுரியில் மாரத்தான் ஓட்டம் கலெக்டர் ச.திவ்யதர்சினி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை ஊராட்சி, வள்ளல் அதியமான் கோட்டத்தில் வலிமையான இந்தியா 75-வது சுதந்திர தின ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, கொடியசைத்து இன்று (21.08.2021) தொடங்கி வைத்தார்.

வலிமையான இந்தியா 75-வது சுதந்திர தின ஓட்டத்தில் நேரு யுவகேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தருமபுரி மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், தேசிய மாணவர் படையினர் என‌ 150க்கும் மேற்பட்டவர்கள் வலிமையான இந்தியா 75-வது சுதந்திர தின ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஓட்டமானது அதியமான் கோட்டத்தில் தொடங்கி, எர்ரபட்டி, ஒட்டபட்டி, அரசு கலைக்கல்லூரி வழியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,"இந்தியா சுதந்திரம் பெற்று 75-ஆண்டுகள் விழாவில் வலிமையான மற்றும் ஆரோக்கியமான சுதந்திர இந்தியா ஓட்டம் 2.0 நிகழ்ச்சியில் பங்கேற்க நான் உறுதிமொழி எடுக்கிறேன். நான், என்னை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகமும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நான் அவர்களை ஊக்குவிப்பேன். வலுவான மற்றும் திறமையான நாடு மற்றும் ஒரு சுறுசுறுப்பான தன்னம்பிக்கையுள்ள சமூகத்தை உருவாக்க என் வாழ்க்கையில் தினமும் முப்பது நிமிட உடற்பயிற்சி செய்வேன் என உறுதியளிக்கிறேன்." என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிறைவாக சுதந்திர இந்தியா ஓட்டம் 2.0 நிகழ்ச்சியில் கலந்து கொண்டமைக்கான சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா வழங்கினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட விளையாட்டு அலுவலர் பியூலா ஜேன் சுசிலா, பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய தேசிய நலப்பணிகள் அலுவலர் முனைவர் சி.கோவிந்தராஜ், அரசு கலைக்கல்லூரி விளையாட்டுத்துறை இயக்குனர் முனைவர் கே.பாலமுருகன், தருமபுரி இந்திய வானொலி ஒலிபரப்பு தலைமை அலுவலர் ஆர்.முரளி, தருமபுரி நேரு யுவ கேந்திரா உறுப்பினர் கே.விஜயன், தருமபுரி நேரு யுவ கேந்திரா கண்காணிப்பாளர் ஜி.வேல்முருகன் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Aug 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!