/* */

பணியமர்த்தக் கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டதாரிகள் போராட்டம்

தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணியில் அமர்த்தகோரி, கலெக்டர் அலுவலகம் முன்பு, பட்டதாரிகள் இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

பணியமர்த்தக் கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டதாரிகள் போராட்டம்
X

தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணி நியமன ஆணை வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய பட்டதாரிகள்.

தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையம் மூலம், மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு, கடந்த டிசம்பர் 5ஆம் தேதி எழுத்துத் தேர்வும், ஜனவரி 27,29ஆம் தேதிகளில் நேர்முகத்தேர்வும் முடிந்து, பிப்ரவரி 25 ந்தேதி இறுதி தேர்வு பட்டியல் இணையத்தில் வெளியானது.

மாவட்ட ஆட்சேர்ப்பு தலைவர் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆணைகள், 26ந்தேதி தபால் மூலம் அனுப்பப்பட்டு பெறப்பட்டது. ஆனால் சான்றிதழ் சரிபார்க்கபட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும் என தெரிவித்து அனுப்பி வைத்தனர். பின் தேர்தல் விதிமுறைகளை காட்டி ஆணைகள் வழங்கப்படவில்லை.

தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கி இரண்டு மாதத்திற்கு மேலாகிறது. இன்னும் வழங்கப்படவில்லை எனக்கூறி தேர்வு செய்யப்பட்ட 111 பட்டதாரிகள், உடனடியாக பணிநியமனம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் 23 தலைமை மத்திய கூட்டுறவு வங்கியில், 21 வங்கிகளில் பணிநியமன ஆணை வழங்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 23 Jun 2021 3:21 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  2. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  4. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  5. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  6. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  9. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’