/* */

மீன் வளத்துறையில் டிரைவர் பணி விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் தகவல்

மீன் வளத்துறையில் டிரைவர் பணி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

மீன் வளத்துறையில் டிரைவர் பணி விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் தகவல்
X

மீன் வளத்துறையில் டிரைவர் பணி விண்ணப்பிக்க கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், தர்மபுரி அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு ஊர்தி ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிட ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் - அருந்ததியினர் எவரும் இல்லாத பட்சத்தில் இந்த இடம் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்) பிரிவில் கீழ்க்காணும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊர்தி ஓட்டுநர் பணிக்கான தகுதிகள்: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாளது தேதியில் தகுதியுள்ள இலகுரக வாகன ஊர்தி ஓட்டுநர் உரிமத்துடன் (Light Vehicle Driving Licence) மூன்று ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.ஒரு வருடத்திற்கு குறையாமல் ஆட்டோமொபைல் ஒர்க் ஷாப்பில் சிறிய பழுதுகள் போன்றவை சரிசெய்தல் பணியில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட தகுதிகளை தகுதி தேர்வு மற்றும் நேர்காணலில் பரிசோதனை செய்யப்படும்.

ஊர்தி ஓட்டுநர் பணிக்கு ரூ. 19500 - 62000 நிலை-8 என்ற சம்பள ஏற்றமுறையில் ஊதியம் வழங்கப்படும். வயது வரம்பை பொறுத்தமட்டில் 01.01.2022 அன்று உள்ளவாறு ஊர்தி ஓட்டுநர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு SC/SCA வகுப்பினர் 37 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், தர்மபுரி அலுவலகத்தில் அலுவலக வேலை நேரங்களில் நேரில் அணுகி விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம். விண்ணபத்தாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ், குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், ஊர்தி ஓட்டுநர் உரிமம், 3 ஆண்டுகள் ஊர்தி ஓட்டுநர் அனுபவ சான்று, ஆட்டோமொபைல் ஒர்க் ஷாப்பில் பயிற்சி பெற்றமைக்கான சான்று ஆகிய அனைத்து ஆவணங்களின் நகல்கள் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தினை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், தர்மபுரி அலுவலகம், 1/165 ஏ.ராமசாமி கவுண்டர் தெரு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (அஞ்சல்) ஒட்டப்பட்டி, தருமபுரி - 636 705, தொலைபேசி எண்: 04342 - 296623 என்ற முகவரிக்கு 05.04.2022 பிற்பகல் 5.00 மணிக்குள் கிடைக்க தக்க வகையில், விண்ணப்ப உறையின் மேல் ஊர்தி ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பம் என எழுதி அனுப்பிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 March 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!