/* */

தருமபுரி: இ பாஸ் இல்லாமல் திரிந்தவர்களின் டூவீலர்கள் பறிமுதல்

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா முழு ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 253 பேர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

தருமபுரி: இ பாஸ் இல்லாமல் திரிந்தவர்களின் டூவீலர்கள் பறிமுதல்
X

தமிழகத்தில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்றினால் அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில், முழு ஊரடங்கு அமலில் இருந்தும்கூட, பலர் வெளியில் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். போலீசாரை ஏமாற்றிவிட்டு வாகனங்களை குறுக்கு வழிகளில் எடுத்து செல்கின்றனர்.

அதே நேரம், வாகனங்களில் காய்கறி, பழங்கள், மளிகைப்பொருட்கள் வீடு தேடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது போன்று விற்பனை செய்பவர்களுக்கு இ-பாஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முக்கியமான தேவைகளுக்கு செல்பவர்களுக்காக அரசு சார்பில் இ பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், தருமபுரியில், இ பாஸ் இல்லாமல் பலர் வாகனங்களில் சுற்றி திரிகின்றனர். அதேபோல், மாவட்டத்தில் உள்ள அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி உட்கோட்டங்களில் ஊரடங்கு விதிமுறைகளை மீது இ பதிவு இல்லாமல் வந்த 253 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

#தருமபுரி #கொரோன #லாக்டவுன் #ஊரடங்கு #விதிமீறல் #வாகனச்சோதனை #tamilnadu #lockdown #coronavirus #coronaspread #covid #police #rulebreakers #seized #epass

Updated On: 4 Jun 2021 8:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  10. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?