/* */

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்:ஆட்சியர் துவக்கிவைத்தார்

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்:ஆட்சியர் துவக்கிவைத்தார்
X

தர்மபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி, கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து  பார்வையிடுகிறார்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்வேறு பணிக்கு செல்லும் 18 வயதுக்கு மேற்பட்டோர் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தவைர் திவ்யதர்சினி தொடங்கி வைத்து பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு பணிக்கு செல்லும் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைகள், அனுமந்தபுரம், மொரப்பூர், சின்னாங்குப்பம், பையர்நத்தம், நாகதாசம்பட்டி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், நல்லம்பள்ளி நகர்ப்புற சுகாதார நிலையம் மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

பல்வேறு பணிக்கு செல்லும் செய்தித்தாள் விநியோகம் செய்யும் நபர்கள், பால் விற்பனையாளர்கள், பணிபுரிவோர், மளிகைப் பொருட்களில் பணிபுரியும் ஊழியர்கள், மருந்தகங்கள், ஆட்டோ டிரைவர்கள், டாக்ஸி டிரைவர்கள், பஸ் டிரைவர்கள், நடத்துனர்கள், மின்துறை ஊழியர்கள், ஈ காமர்ஸ் முகவர்கள், தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பிற மாநிலத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நபர்கள், கோவிட் தடுப்பு பணியில் பணியாற்றும் தன்னார்வலர்கள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

மேலும் 18 வயத்திற்கு மேற்பட்டோர் 44 வயதுக்கு உட்பட்டோர் ஒருவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு நண்பர்கள், உறவினர்கள், அருகில் உள்ளவர்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அறிவுரை வழங்கிட வேண்டும், எந்தவித பக்கவிளைவும் ஏற்படுத்தாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். உடலில் வேறு ஏதேனும் நோய் இருப்பின் மருத்துவரின் ஆலோசனைக்கு பின் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றார்.

இந்நிகழ்ச்சியில், தருமபுரி சார் ஆட்சியர் பிரதாப், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெமினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, ரவி, வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், மருத்துவர்கள் தீபா, சபிதா, மானசா மற்றும் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 May 2021 11:16 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  2. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  3. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  4. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  5. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?