/* */

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கூலித்தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

தர்மபுரி மாவட்டத்தில், கூட்டுக் குடும்பமாக வசிக்கும் கூலித் தொழிலாளர்கள், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று, கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கூலித்தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
X

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கேட்டு, குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்த மக்கள்.

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்விக்கடன் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன.

பென்னாகரம் போடுர்ரோடு பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்களான நாங்கள் கூலி வேலை செய்து, அதில் கிடைக்கும் குறைந்த வருவாயை கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறோம். கடந்த பல ஆண்டுகளாக கூட்டுக்குடும்பமாக வசிப்பதால் வீடுகளில் போதிய இடம் இல்லாமல் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம். எனவே எங்கள் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

பொது கழிப்பிட வசதி

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்புசாரா நலவாரிய தொழிலாளர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், அரூர், கச்சேரி மேடு பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு, அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறார்கள். இதேபோல் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற, தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சொல்கிறார்கள். இந்தப் பகுதியில் பொது கழிப்பிட வசதி இல்லாததால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கட்சி கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அந்த பகுதி அருகே கட்டண கழிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்திய கலெக்டர் திவ்யதர்சினி, அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...