/* */

அனைத்து காேயில்களிலும் ஆடி அமாவாசை தரிசனத்துக்கு தடை -தருமபுரி ஆட்சியர் அதிரடி

தருமபுரி மாவட்டத்தில் அனைத்து திருக்கோயில்களிலும் ஆடி அமாவாசை சுவாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அனைத்து காேயில்களிலும்  ஆடி அமாவாசை தரிசனத்துக்கு தடை -தருமபுரி ஆட்சியர் அதிரடி
X

தர்மபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் திருக்கோயில்களில் நடைபெறும் ஐதீக முறைப்படியான பூஜை புனஸ்காரங்கள் கோயில் அலுவலர்களால் மட்டும் நடத்திக்கொள்ளவும், பொதுமக்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகை புரிவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. இதன் காரணமாக கொரோனா நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கக்கூடும். எஎபொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காேயில்களிலும் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்ட்டுள்ளது.

அதன்படி,

1) அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில், தீர்த்தமலை, அரூர் வட்டம்.

2) அருள்மிகு காலபைரவர் திருக்கோயில், அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி வட்டம்.

3) அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், வே.முத்தம்பட்டி, நல்லம்பள்ளி வட்டம்.

4) அருள்மிகு தேசநாதேஸ்வரசுவாமி திருக்கோயில், ஒகேனக்கல், பென்னாகரம் வட்டம்.

5) அருள்மிகு சென்னியம்மன் திருக்கோயில், தா.அம்மாபேட்டை, அரூர் வட்டம்.

6) அருள்மிகு முத்தித்தராயசுவாமி திருக்கோயில், நெருப்பூர், பென்னாகரம் வட்டம்.

ஆகிய திருக்கோயில்கள் மற்றும் அனைத்து புராதான திருக்கோயில்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசை (08.08.2021 ஞாயிற்றுகிழமை) அன்று சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது. மேலும் கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக ஒகேனக்கல், காவேரி ஆற்றங்கரையில் மற்றும் தா.அம்மாபேட்டை ஆற்றங்கரையில் மக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும் அனுமதி இல்லை. மேலும், ஆகமவிதிப்படி சுவாமி அலங்காரங்கள், பூஜை புனஸ்காரங்கள் அர்ச்சர்கள், திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, தெரிவித்துள்ளார்.

Updated On: 6 Aug 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!