/* */

10 மாதங்களுக்குள்ளாகவே திமுகவின் பகல் வேஷம் கலைந்து விட்டது: ஓபிஎஸ்

பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் 10 மாதங்களுக்குள்ளாகவே திமுகவின் பகல் வேஷம் கலைந்து விட்டது என கடலூரில் ஓபிஎஸ் பேச்சு

HIGHLIGHTS

10 மாதங்களுக்குள்ளாகவே திமுகவின் பகல் வேஷம் கலைந்து விட்டது: ஓபிஎஸ்
X

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதன்படி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, பிரசாரம் கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அப்பொழுது அவர் பேசுகையில், நடந்து முடிந்த தேர்தலில் திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை கூறினர், ஆனால் மக்களும் அதனை நம்பி வாக்களித்துவிட்டனர், பின்னர் தற்பொழுது 505 பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நீட் என்ற சொல்லு வர காரணமே திமுக அரசு தான். தமிழகத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறினர், ஆனால் தற்பொழுது வரை அது நடைபெறவில்லை,

அதுமட்டுமின்றி நகைக் கடன் ரத்து என்று உதயநிதி ஸ்டாலின் செய்த தேர்தல் பிரசாரத்தை நம்பி தமிழகத்தில் 35 லட்சம் பேர் தங்களது 5 பவுன் நகையை அடகு வைத்து கடனாளியாக மாறி விட்டனர், ஆகவே இனி எந்த காலத்திலும் மக்கள் திமுகவை நம்ப தயாராக இல்லை என கூறுகிறார்கள்.

அதுமட்டும் இன்றி திமுகவினர் தொடர்ந்து வேட்பாளர்களை அச்சுறுத்தல் செய்து வருகின்றனர், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மிரட்டல் விடுகிறார்கள், அதன் காரணமாக தான் காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டார்.

உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட்டு வெற்றி பெற திமுக முயற்சி செய்த்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு வழங்கக்கூடிய சீட்டில் வாக்காளர் புகைப்படம் இல்லாமல் இந்த முறை வழங்குகிறார்கள். இதனை பயன்படுத்தி திமுகவினர் கள்ள ஓட்டு போட திட்டம் செய்துள்ளார்கள், எனவே வாக்களர்கள் தங்கள் புகைப்படம் இல்லாமல் வழங்கப்படும் வாக்கு சீட்டை வாங்க மறுப்பு தெரிவிக்க வேண்டும்.

மேலும், திமுக சார்பில் கொடுக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் இருந்த அரிசியை மாட்டிற்கு வைத்தால், இந்த அரிசியை எனக்கு ஏன் வைத்தாய்? என்பது போல மாடு கூட முறைக்கிறது. அந்த அளவிற்கு தரமற்ற பொருட்களை பொங்கல் பரிசாக வழங்கி உள்ளனர்.

ஆகவே, அதிமுக வார்டு நிர்வாகிகள் கவனமுடன் இருந்து அதிமுகவை வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.

Updated On: 13 Feb 2022 4:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  2. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  3. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  4. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  5. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  6. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  9. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  10. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...