/* */

கழிவு நீர், குப்பை கலப்பால் கடலூர் வெள்ளி கடற்கரை செந்நிறமாக மாறியது

தென்பெண்ணை,கெடிலம் ஆறுகளின் நீர் கடலூர் கடலில் கலந்ததால் நிறம் மாறிய கடல் குப்பை கழிவுகளாக காட்சியளிக்கிறது.

HIGHLIGHTS

கழிவு நீர், குப்பை கலப்பால் கடலூர் வெள்ளி கடற்கரை செந்நிறமாக மாறியது
X

குப்பை கூளங்கள் கலப்பால் கடலூர் கடல் நிறம் மாறி உள்ளது.

கடலூர் மாவட்டம் ஒரு வடிகால் மாவட்டம், மழை வெள்ளம் என அனைத்திலும் பாதிக்கப்படும் கடலூர் மாவட்டம். இந்த முறை வடகிழக்கு பருவ மழையினாலும், தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப்பெருக்காலும் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பெய்யும் மழைநீர் தென்பெண்ணை,கெடிலம் ஆறுகளின் வழியாக கடலூரில் வங்கக் கடலில் கலக்கிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் கடலில் கலக்கிறது.

இதன் காரணமாக கடலூர் வெள்ளி கடற்கரை செந்நிறமாக மாறி உள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஆறுகள் நீர் நிலைகளில் இருந்து அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரை மற்றும் குப்பை கழிவுகள் கடற்கரையில் தேங்கி கடற்கரை மிகுந்த மோசமாக காட்சி அளிக்கிறது.

ஆசியாவின் மிக நீளமான கடற்கரைகளில் இரண்டாவது இடத்தில் உள்ள வெள்ளி கடற்கரை தொடர் மழை எதிரொலியாக குப்பை கடற்கரையாக மாறி உள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகம் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ‌

Updated On: 30 Nov 2021 3:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  2. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  3. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  4. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  6. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  7. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  8. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  9. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  10. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!