/* */

கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு எடுக்கும் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

Union Minister of State Murugan Interview எத்தனை கட்சிகள் கூட்டணியில் வருகிறார்கள், யார் யாரெல்லாம் வருகிறார்கள், எப்போது வருகிறார்கள் என தேசிய தலைமை தெரிவிக்கும்

HIGHLIGHTS

கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு எடுக்கும் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
X

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

Union Minister of State Murugan Interview

கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "இன்று தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் தலைமையில் காலையில் கேரள மாநிலத்திலும் பிற்பகல் தமிழகத்திற்கான மாநாடு கோவையிலும் நடைபெற உள்ளது. தேசிய தலைவர்கள் வரும்போது அவர்களின் வசதிக்கேற்ப இரு மாநிலத்திற்கும் அருகாமையில் இருக்கக்கூடிய இடங்களில் நிகழ்ச்சிகள் நடப்பது இயல்பு. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சிப் பணிகளை முடுக்கிவிடும் வகையில், தமிழக பாராளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம் கோவையில் இன்று நடைபெற உள்ளது. அதில் தேர்தலை எப்படி எதிர்கொள்வது மற்றும் தயாரிப்புகள் குறித்து தேசிய தலைவர்கள் அறிவுரை வழங்குவார்கள். கூட்டணியை பொறுத்தவரை தேசிய தலைமை முறையான அறிவிப்பு வெளியிடுவார்கள். எத்தனை கட்சிகள் கூட்டணியில் வருகிறார்கள், யார் யாரெல்லாம் வருகிறார்கள், எப்போது வருகிறார்கள் என தேசிய தலைமை தெரிவிக்கும்.

வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தேசிய தலைமை மற்றும் பாராளுமன்ற குழு அறிவிப்பார்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரும்பி கோவையில் போட்டியிட்டால், அதற்கான வேலைகளை செய்ய தயாராக உள்ளோம். நடிகர் விஜய் கட்சி துவங்கினாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கு பெறவில்லை என்றும் கவனிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே என்னைப் பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் அவரது பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். 2026 இல் பணிகள் வேகம் எடுக்கும் எனவும் இப்போது கவனிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2014 தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமைத்து கிட்டத்தட்ட 19 சதவீத வாக்குகள் பெற்றதோடு, கன்னியாகுமரி மற்றும் தர்மபுரியில் வெற்றி பெற்றோம். எனவே, மூன்றாவது அணி அல்லது திமுக, அதிமுக அல்லாத மற்ற கட்சிகள் வர முடியாது என்பது ஏற்கனவே பொய்யாகி இருக்கிறது.

தேசத்தின் ஒற்றுமை அல்லது தேசத்திற்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சி ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது என்.ஐ.ஏ ஆய்வு காட்டி கொடுத்துள்ளது. இதுவரை, தமிழக காவல் துறையினர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்.ஐ.ஏ அவர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்த பிறகு, நாட்டிற்கு எதிராக செயல்கள் செய்திருப்பதை உறுதிப்படுத்திய பிறகு கைது செய்து இருக்கிறார்கள். என்.ஐ.ஏ என்பது தேசத்திற்கும் தேச ஒற்றுமைக்கும் எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. நாம் தமிழர் கட்சி தேசத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது. இந்த நாட்டை பாதுகாக்கும் மிக முக்கியமான அமைப்பு தேசிய புலனாய்வு முகமை. நாட்டில் தீவிரவாதம், பயங்கரவாதம், தேசத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக உள்ளது. அந்த அமைப்பு அவர்களது வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. தவறு செய்பவர்களிடம் கேள்வி கேட்கும் போது, என்னை மிரட்டுகிறார்கள்.. என்னை காப்பாற்றுங்கள் என அலறுவார்கள். அதைத்தான் இப்போது தவறு செய்தவர்கள் செய்கிறார்கள்' என தெரிவித்தார்.

Updated On: 4 Feb 2024 8:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  2. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  3. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  5. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  6. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  8. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!