/* */

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: கோவையில் பரபரப்பு

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் ரோடு ஷோ நடைபெற உள்ள நிலையில், வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

HIGHLIGHTS

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: கோவையில்  பரபரப்பு
X

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், இன்று காலை 11 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.

இதனிடையே அந்தப் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல் துறையினர் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் உதவியுடன் பள்ளி வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் தேர்வுகள் எழுதிக் கொண்டிருக்கும் போது சோதனை நடந்தது. இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு இல்லை என்பதும், பொய்யாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனால் காவல் துறையினரும், பள்ளி நிர்வாகத்தினரும் நிம்மதி அடைந்தனர்.

தேர்வுகள் முடிவடைந்த நிலையில், மதியத்திற்கு பிறகு மற்ற மாணவர்களுக்கு வழக்கம் போல வகுப்புகள் நடத்தப்பட்டன. காவல் துறையினர் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக தகவல் அறிந்த பெற்றோர்கள், பள்ளி முன்பாக திரண்டனர். அப்போது தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் எனக் கூறி, பள்ளி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் காவல் துறையினர் வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்பதால் அச்சப்பட தேவையில்லை என சமாதானப்படுத்தினர். கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் ரோடு ஷோ நடைபெற உள்ள நிலையில், பள்ளிக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 18 March 2024 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  4. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  6. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  7. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  8. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  9. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  10. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா