/* */

ராணுவ சீருடையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த முன்னாள் ராணுவ அதிகாரி

வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்த அவர் ராணுவ உடையிலேயே வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்து சென்றார்.

HIGHLIGHTS

ராணுவ சீருடையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த முன்னாள் ராணுவ அதிகாரி
X

மதுரை விநாயகம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் மதுரை விநாயகம். இவர் 20 வருடங்களாக இந்திய ராணுவத்தில் ஜாயின் கமிஷன் அதிகாரியாக பணி புரிந்து 2016 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். இவர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரான சர்மிளாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்த அவர் ராணுவ உடையிலேயே வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்து சென்றார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை விநாயகம், இது நாள் வரை இந்திய நாட்டு எல்லையை பாதுகாத்து வந்ததாகவும் தற்பொழுது ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென இந்த தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார். மேலும் சம்பாதிப்பதற்காக வரவில்லை எனத் தெரிவித்தார்.

தற்பொழுது உள்ளவர்களை மூன்று முறை எம்பி ஆக்கினாலும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக்கினாலும் ஓய்வூதியத்தையும் சம்பளத்தையும் எடுத்துக் கொள்கிறார்கள் எனவும் மக்களின் வரிப்பணம் முழுவதும் அவர்களிடம் சென்று விடுவதாக தெரிவித்தார்.
மேலும் நான் வெற்றி பெற்றால் எனது தொகுதி மக்களுக்கு வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி, உள்ளிட்டவற்றை வசூலிக்க மாட்டேன் எனத் தெரிவித்தார். மேலும் எனது பொள்ளாச்சி தொகுதியில் தென்னை விவசாயிகளின் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வேன் எனவும் நீர்நிலைத் திட்டங்களை சரி செய்வேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 21 March 2024 8:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...