/* */

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை: போலீசார் விசாரணை

மனமுடைந்த தந்தை கணேசன், தாய் விமலா, மகள் தியா காயத்ரி ஆகியோர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

HIGHLIGHTS

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

கோவை கவுண்டம்பாளையம் டிஜவஹர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். 65 வயதான இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி விமலா (55). இவர்களுக்கு தியா காயத்ரி (25) என்ற மகள் இருந்தார். இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந் தேதி காயத்ரிக்கும், கோவை வடவள்ளியை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் தீட்சித் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணமானதும் இருவரும் பெங்களூருவில் தங்கி இருந்து ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். பின்னர் திருமணமான ஒரு மாதத்திலேயே கடந்த டிசம்பர் மாதம் காயத்ரிக்கும், அவருடைய கணவர் தீட்சித்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கோபித்துக் கொண்டு காயத்ரி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. திருமணமான ஒரு மாதத்திலேயே தனது மகள் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த தந்தை கணேசன், தாய் விமலா, மகள் தியா காயத்ரி ஆகியோர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். கதவை பூட்டிக் கொண்டு வீட்டிற்குள் 3 பேரும் கடந்த 21-ந் தேதி கேக்கில் விஷத்தை தடவி அதை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்யும் முன்பு கணேசன் கோவையில் உள்ள தம்பியை தொடர்பு கொண்டு மகளின் நிலை குறித்து மிகுந்த வேதனையுடன் தெரிவித்ததாகவும், அதன்பிறகு அவர் தொடர்பு கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் நேற்று இரவு 8 மணியளவில் வீட்டிற்கு வந்தார்.

பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டிக்கிடந்தது. கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிற்குள் கணேசன், விமலா, காயத்ரி ஆகியோர் பிணமாக கிடந்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து உடனே கவுண்டம்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர் கணேசன், விமலா, காயத்ரி ஆகியோரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், அவர்களின் தற்கொலைக்கு காரணம் தியா காயத்ரியின் கணவருக்கு தற்பாலின சேர்க்கை பழக்கம் இருந்ததால் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வந்ததாலும், பெற்றோருக்கு வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Feb 2024 4:58 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்