/* */

கோவையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு - பட்டாசு வெடித்து மதுப்பிரியர்கள் கொண்டாட்டம்

ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து, கோவையில் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டன; இதை, பட்டாசு வெடித்து மதுப்பிரியர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

HIGHLIGHTS

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதில் பாதிப்பு அதிகம் இருந்த கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உட்பட 11 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது.

இந்த சூழலில், அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல், ஒரேமாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோவை உட்பட 11 மாவட்டங்களிலும், டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்து, செயல்படத் தொடங்கியுள்ளன. மதுபான கூடங்கள் இயங்காது என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கோவை மாவட்டத்தில் உள்ள 293 டாஸ்மாக் கடைகளும் இன்று திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மதுக்கடைகள் திறப்பை கொண்டாடும் வகையில் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு, மது பிரியர்கள் தேங்காயில் கற்பூரம் வைத்து வழிபட்டு மது வகைகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதேபோல உக்கடம் - சுங்கம் புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு, மது பிரியர்கள் சிலர் மது பாட்டிலில் ராக்கெட்டுகள் விட்டும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி பண்டிகை போல கொண்டாடி மகிழ்ந்தனர்.

Updated On: 5 July 2021 7:18 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  2. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  4. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  6. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  7. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  8. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  9. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!