/* */

டிக் டாக் பிரபலமான ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சிக்கந்தர் ஷா மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

டிக் டாக் பிரபலமான ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது
X

ரவுடி பேபி சூர்யா.

திருப்பூரை சேர்ந்த சூர்யா (எ) சுப்புலட்சுமி, 'ரவுடி பேபி' என்ற பெயரில் சமூக வலைதளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதேபோல, மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சிக்கந்தர் ஷா, 49, என்பவரும் வீடியோ பதிவிட்டு வந்தார். ஆபாசமாக பேசியும், ஆடியும் அவர்கள் வெளியிட்ட வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர்கள் மீது கோவையை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த கோவை சைபர் கிரைம் போலீசார், இணையதளங்களில் ஆபாசமாக பேசியதாக கடந்த ஜனவரி மாதம் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சிக்கந்தர் ஷா மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் ரவுடி பேபி சூர்யா மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பரிந்துரையின் பேரில் ஆட்சியர் சமீரன் சமீரன் உத்தரவிட்டார். இதற்கான நகல் சிறையில் உள்ள அவரிடம் இன்று வழங்கப்பட்டது.

Updated On: 24 Feb 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?