கோவையில் ஒரே நேரத்தில் 13 நாய்கள் எரிந்து சாம்பலான சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி

கோவையில் ஒரே நேரத்தில் 13 நாய்கள் எரிந்து சாம்பலான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோவையில் ஒரே நேரத்தில் 13 நாய்கள் எரிந்து சாம்பலான சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி
X

கோவை தீ விபத்தில் உயிரிழந்த நாய்கள்.

கோவை ஆர் எஸ் புரம் அடுத்த லாலிரோடு பகுதியை சேர்ந்த நவீன் மற்றும் வடவள்ளி கருப்பராயன் கோவில் பகுதியை சேர்ந்த பாபு ஆகிய இருவரும் இணைந்து வடவள்ளி கருப்பராயன் கோவில் பகுதியில் விற்பனைக்காக நாய்கள் வளர்த்து வந்து உள்ளனர். சுமார் 13 நாய்களை அவர்கள் வளர்த்து வந்த நிலையில், நாய்களுக்கு என தனித்தனியே கூண்டுகள் அமைத்தும் பராமரித்து வந்து உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை பாபு அங்கு வந்த போது அந்தப் பகுதி முழுவதும் எரிந்து சாம்பலாகி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், கூண்டில் இருந்த நாய்கள் அனைத்தும் இறந்த நிலையிலும் ஒரே ஒரு நாய் மட்டும் உயிருக்கு போராடிய நிலையிலும் இருந்ததை கண்டு உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்து உள்ளார்.

இதை அடுத்து அங்கு சென்ற போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், உயிருக்கு போராடிய ஒரு நாயை மட்டும் மீட்டு அதற்கான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்டுள்ள முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் யாரோ நாய்கள் இருந்ச கூண்டுக்கு தீ வைத்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 March 2023 4:58 PM GMT

Related News

Latest News

 1. சேலம்
  சேலத்தில் வரும் 26ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
 2. சேலம்
  அரவை கொப்பரை கிலோவுக்கு ரூ.108.60.. கொள்முதலுக்கான விண்ணப்பங்கள்...
 3. சினிமா
  ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்கள்!
 4. சேலம்
  சேலம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட...
 5. கள்ளக்குறிச்சி
  கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை: பொதுமக்கள்
 6. காஞ்சிபுரம்
  சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
 7. காஞ்சிபுரம்
  மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
 8. சினிமா
  ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
 9. டாக்டர் சார்
  இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
 10. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...