/* */

கோவையில் பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பு

PM Coimbatore Visit கண்ணப்பன் நகர் பிரிவில்ல் இருந்து ஆர்.எஸ். புரம் வரை சுமார் 4 கி. மீ. வாகன அணிவகுப்பு பேரணியானது நடைபெற இருக்கிறது.

HIGHLIGHTS

கோவையில் பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பு
X

மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம்

PM Coimbatore Visit

பிரதமர் நரேந்திர மோடி கோவை நகருக்கு 18ம் தேதி வருகை தந்து, அன்றைய தினம் மாலையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பு பேரணியில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கண்ணப்பன் நகர் பிரிவு சாலையில் இருந்து ஆர்.எஸ். புரம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த வாகன அணிவகுப்பு பேரணியானது நடைபெற இருக்கிறது. கோவை மட்டுமின்றி மேற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க இருக்கின்றனர். சுமார் ஒரு லட்சம் பேர் வரை பிரதமர் நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதன் காரணமாக அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து போலீசாரை வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை நகரில் பிரதமர் வருகையின் போது சுமார் 5 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பிற்கான எஸ்.பி.ஜி பிரிவு அதிகாரிகளும் வாகன பேரணி நடைபெறும் பகுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகின்றனர். இதனிடையே கோவையில் இன்று முதல் வரும் 19ம் தேதி வரை துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகள் ரெட் ஜோனாக அறிவித்துள்ள மாநகர காவல் துறையினர், இந்த பகுதிகளில் 19 ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதித்துள்ளனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் அதிகாரிகளுடன் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை எஸ்பிஜி குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது காவல் துறையினர் அந்த பேரணிக்கு அனுமதி மறுத்தனர். சுமார் இரண்டு மணி நேர ஆலோசனைக்கு பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். பிரதமர் நிகழ்ச்சிக்கான அனுமதி மறுப்பு குறித்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் கருத்து கேட்க போது, தெளிவான ஒரு முடிவே இல்லாமல் கருத்து கூற முடியாது எனக் கூறி சென்றார்.

18ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுவதாலும், இதுவரை கோவையில் எந்த ஒரு ரோட் ஷோ நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கவில்லை என்பதாலும் பிரதமருக்கான தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருப்பதாக மாநகர காவல்துறை சார்பில் தகவல் கூறப்பட்டுள்ளது. இதனிடையே பாஜக மாநில பொதுசெயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் பாஜக வினர் பிரதமருக்கு பாதுகாப்பு வேண்டுமென காவல் ஆணையரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Updated On: 15 March 2024 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  2. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  3. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  4. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  5. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  6. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  7. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  8. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  9. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  10. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய