/* */

கோவை கூடைப்பந்து போட்டியில் இந்திய கப்பல் படை அணி வெற்றி

கோவை கூடைப்பந்து போட்டியில் இந்திய கப்பல் படை அணி வெற்றி பெற்றது.

HIGHLIGHTS

கோவை  கூடைப்பந்து போட்டியில் இந்திய கப்பல் படை அணி வெற்றி
X

கோவை கூடைப்பந்து போட்டி.

கோவையில் நடந்து வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இந்திய கப்பல் படை அணி வெற்றி பெற்றது.

கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவில் 56-–ம் ஆண்டுக்கான ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 20–-ம் ஆண்டுக்கான பெண்கள் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை கூடைப்பந்து போட்டிகள், நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

இதில் 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. 4-வது நாளான இன்று நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவுக்கான முதல் போட்டி இன்று காலை தொடங்கியது. அப்போது இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து, தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் இந்திய கப்பல் படை அணி 73–- 35 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. அடுத்தபடியாக கேரளா மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது.

இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 96 –- 51 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஜுன் 1-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்க உள்ளது.

Updated On: 30 May 2023 4:52 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!