/* */

தேர்தல் இடப்பங்கீடு : முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலினை, விசிக தலைவர் தொல். திருமாவளவன், அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.

HIGHLIGHTS

தேர்தல் இடப்பங்கீடு : முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு
X

செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன். 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு தொடர்பாக, சென்னையில் இன்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்து பேசினார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சந்திப்பு பின்னர், நிருபர்களிடம் திருமாவளவன் பேசியதாவது:

புத்தாண்டு பிறந்த பின்னர் முதலமைச்சரை சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தேன். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக, மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகின்றது. 2,3 நாட்களாக விசிக மாவட்டச் செயலாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசிகவிற்கு போதிய இடங்களை ஒதுக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைமை பதவிகளில் விசிகவிற்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம். சனாதன கட்சிகள் கொட்டமடிக்கும் நிலையில் சமூகநீதியை பாதுகாக்க முதலமைச்சர் எடுக்கும் முயற்சி வரவேற்கப்படவேண்டிய ஒன்று. அரியலூர் மாணவி விவகாரத்தில், மதவாத சக்திகள் அவதூறு பரப்பி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 29 Jan 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  5. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  6. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  9. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!