/* */

சென்னை மாநகரப் பேருந்துகளில் யு.பி.ஐ. சேவை

யு.பி.ஐ. முறையை பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

சென்னை மாநகரப் பேருந்துகளில்  யு.பி.ஐ. சேவை
X

இன்று வெளியே செல்லும் பொழுது யாரும் கையில் பணத்தை எடுத்துச் செல்வதில்லை. அனைவரும் டிஜிட்டல் கட்டண முறையை தான் பயன்படுத்தி வருகின்றனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. இதனால் அனைவரும் சுலபமாக கட்டணங்களை செலுத்தி வருகின்றோம்.

சென்னை மாநகரப்போக்குவரத்து கழகத்திற்கு 50 புதிய (பிஎஸ்-VI) பேருந்து சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தனர்.

மேலும் டெபிட் கார்டு, யு.பி.ஐ. மூலம் பயணிகள் டிக்கெட் பெற வசதியாக மின்னணு டிக்கெட் இயந்திரத்தையும் நடத்துநர்களுக்கு வழங்கினர்.

யு.பி.ஐ. முறையை பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் யு.பி.ஐ. சேவையை பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் முறையை பேருந்துகளில் கொண்டு வர தமிழக அரசு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில், பேருந்துகளில் நடத்துநர்கள் யு.பி.ஐ. மற்றும் கார்டுகள் மூலம் பணம் பெற்றுக் கொண்டு பயணச்சீட்டு வழங்கும் வகையிலான புதிய கையடக்கக் கருவிகளை அமைச்சர்கள் நடத்துநர்களுக்கு வழங்கினர். தொடுதிரை வசதி கொண்ட இந்த கருவியில், பயணிகள் ஏறுமிடம் மற்றும் சேருமிடத்தை தேர்வு செய்து அதற்கான கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.

மேலும், இக்கருவி மூலம் கார்டு மற்றும் யு.பி.ஐ., க்யூஆர் குறியீடு பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On: 28 Feb 2024 2:57 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!