/* */

மாற்றுத்திறனாளிகள் கபடி போட்டியில் தமிழ்நாடு அணி 4வது முறையாக சாம்பியன்

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கபாடி போட்டியில் தமிழ்நாடு அணி நான்காம் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகள் கபடி போட்டியில்  தமிழ்நாடு அணி 4வது முறையாக சாம்பியன்
X

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கபாடி போட்டியில் தமிழ்நாடு அணி நான்காம் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கபாடி போட்டி: தமிழ்நாடு அணி நான்காம் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை.
தேசிய அளவிலான 4வது மாற்றுத்திறனாளிகளுக்கான கபாடி போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்த்தான், பீகார், சத்தீஸ்கர், விதர்பா, உத்தரகாண்ட் உள்ளிட்ட 16 மாநில அணிகள் பங்கேற்றன. தொடக்கமாக கடந்த 29 ந்தேதி கோப்பை மற்றும் வீரர்கள் அறிமுக விழா நடந்தது. இதனைத்தொடர்ந்து 30 ந்தேதி கபாடி போட்டி தொடங்கி நடைபெற்றது. முதல் போட்டியில் தமிழ்நாடு-கர்நாடக அணி வீரர்கள் களம் கண்டதில் தமிழ்நாடு அணி 33-20 புள்ளிகள் பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது. ஜார்க்கண்ட் அணியுடன் மோதிய தமிழ்நாடு அணி 45-9 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் தெலுங்கானா அணியுடன் மோதிய தமிழக அணி 33-3 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய தமிழக அணி, மஹாராஷ்ட்ர அணியை 42-21 வென்று இறுதிச்சுற்றிக்கு தகுதி பெற்றது. அனல் பறக்க நடந்த இறுதி ஆட்டத்தில் ஆந்திராவை எதிர்கொண்டு தமிழக அணி 45-25 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்று கோப்பையை தன் வசமாக்கிய தமிழ்நாடு அணி கோப்பையை 4 வது முறையாக தக்க வைத்துக்கொண்டது. தமிழக அணி எதிர்கொண்ட ஒவ்வொரு ஆட்டத்திலும் தன்னை எதிர்த்து விளையாடிய அணிகளை அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மாற்றுத் திறனாளிகள் கபாடி சங்க பொதுச்செயலாளரும்,தேசிய மாற்றுத்திறனாளிகள் கபாடி கூட்டமைப்பின் துணைத்தலைவர் ரமேஷ் கண்ணன் கூறுகையில்: பல ஆண்டுகளாக தமிழ்நாடு அணிக்காக விளையாடி கொண்டிருக்கக்கும் வீரர்களுக்கு இதுவரைக்கும் அரசு சார்பில் இருந்து பெரிய அளவில் எந்த ஒரு உதவித் தொகையோ, அரசு வேலை வாய்ப்போ எதுமே கிடைக்க வில்லை, அதனால் வீரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசாங்க வேலை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதே போன்று, இனிமேல் வருங்காலத்தில் வரக்கூடிய வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்டம் தோறும் பயிற்சி ஆட்டம் விளையாடுவதற்கு மைதானங்கள் அமைத்து தரவும், மாதந்தோறும் ஊக்கத் தொகை வழங்க தமிழக அரசுக்கு கேட்டுக்கொள்கிறோம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிகழ்வில் தமிழக மாற்றுத் திறனாளிகள் கபாடி சங்க பொதுச்செயலாளரும், தேசிய மாற்றுத்திறனாளிகள் கபாடி கூட்டமைப்பின் துணைத்தலைவர் ரமேஷ் கண்ணன், சங்க பொருளாளர் செந்தில் குமார், சங்க ஆலோசகர் பாக்கியநாதன், அணி கேப்டன் மகேஸ் உள்ளிட்ட அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.
Updated On: 2 May 2022 1:07 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  2. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  3. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  4. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  5. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  6. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  7. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  8. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  9. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  10. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!