/* */

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை கூகுள்மேப் மூலம் கண்காணிக்கும் காவல்துறை

சென்னை மாநகர சாலைகளில் உள்ள முக்கிய சிக்னல் சந்திப்புகள் இந்த திரையில் தெளிவாக தெரியும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை கூகுள்மேப் மூலம் கண்காணிக்கும் காவல்துறை
X

சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், காலை மற்றும் மாலை வேளைகளில் வாகனங்களால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பள்ளி-கல்லூரிகள் வழக்கம் போல் செயல் படுவதாலும், கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலகி இயல்பு நிலை திரும்பி இருப்பதாலும், மக்கள் வழக்கம் போல் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.

இது போன்ற போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்களும், வேலைக்கு செல்பவர்களும் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாமல் திணறும் சூழல் நிலவுகிறது.

இதைத் தொடர்ந்து சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கமி‌ஷனர் சங்கர் ஜிவால், போக்குவரத்து கூடுதல் கமி‌ஷனர் கபில்குமார் சரத்கர் ஆகியோர் புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, வேப்பேரி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் 7-வது மாடியில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பெரிய திரை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

சென்னை மாநகர சாலைகளில் உள்ள முக்கிய சிக்னல் சந்திப்புகள் இந்த திரையில் தெளிவாக தெரியும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பச்சை, ஆரஞ்ச், சிகப்பு, அடர் சிகப்பு ஆகிய 4 வண்ணங்கள் திரையில் தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் சீராக சென்று கொண்டிருந்தால் திரையில் பச்சை, ஆரஞ்ச் நிறம் எரியும். அதே நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் சிகப்பு மற்றும் அடர் சிகப்பு நிறங்கள் தோன்றுகின்றன.

இதனையடுத்து போக்கு வரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் உள்ள ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நெரிசல் சரிசெய்யப்டுகிறது.

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் அது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிவிப்பதற்கு வசதியாக 9003130103 என்ற அலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்ணில் வாட்ஸ் அப் வசதி உள்ளது. இதில் பொதுமக்கள் புகார் செய்தால் உடனடியாக கூகுள் மேப் மூலம் கண்காணித்து போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று சென்னை டிராபிக் போலீஸ் என்ற டுவிட்டர் கணக்கிலும், பேஸ்புக் பக்கத்திலும் புகார்களை பதிவு செய்தால் 5 நிமிடத்தில் நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்கு வரத்து காவல்துறை தெரிவித்துள்ளது

Updated On: 18 April 2022 9:32 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  2. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  3. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  4. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  5. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  6. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  7. நாமக்கல்
    இன்று தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 61 வணிக நிறுவனங்கள் மீது...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் ஒரே நாளில் முட்டை விலை 20 பைசா உயர்வு : ஒரு முட்டை ரூ....
  9. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே பசு மாடுகள் இறந்தது தொடர்பாக ஒருவர் கைது
  10. ஈரோடு
    தோல்வி பயத்தால் ஹிட்லரின் வழியை மோடி பயன்படுத்துகிறார்: ஈரோட்டில்...