/* */

மோசடி பணத்தில் பங்கு கேட்ட பாஜ பிரமுகரை வெட்டிய வழக்கில் 2 பேர் கைது

சென்னையில் மோசடி செய்த பணத்தில் பங்கு கேட்ட பாஜ பிரமுகரை வெட்டிய வழக்கில் 2 பேரை கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

சென்னை பெரம்பூர் ஜமுனா பாய் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்(57). இவர் பாஜக வடசென்னை தொழிற்பிரிவு செயலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் மாதவரம் திரையரங்கம் எதிரே உள்ள டீ கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ராஜூவை சரமாரியாக வெட்டினர். படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை செம்பியம் போலீசார் ஆய்வு செய்ததில், அந்த பகுதி வழியாக வெட்டுப்பட்ட பாஜக பிரமுகர் ராஜிவ்வின் நண்பர் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த விஷ்வா(31) வந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து செம்பியம் போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது, பல தகவல்கள் வெளிவந்தது. அதில், விஷ்வாவும், பாஜ பிரமுகரான ராஜூவும் சேர்ந்து சென்னையில் கல்லூரிகளில் சீட் வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று அவர்களை ஏமாற்றி உள்ளனர். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2019ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து ராஜீவ் மற்றும் விஷ்வாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு இருவரும் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளனர். ஏமாற்றிய பணம் சுமார் ஒரு கோடி ரூபாய் விஷ்வாவிடம் இருந்துள்ளது. இதனை அடிக்கடி கேட்டு ராஜீவ் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் சிறிது சிறிதாக 83 லட்சம் ரூபாய் வரை விஷ்வா ராஜிவ்க்கு பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மேல் பணம் தர முடியாது என்று விஷ்வா தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன் ராஜீவ் போனில் அழைத்து எனக்கு கண்டிப்பாக 20 லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்று மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஷ்வா சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்த பிரபல ரவுடி சதீஷ்குமாரிடம் தகவலை கூறி ராஜீவை கொலை செய்யுமாறு கூறியுள்ளார்.

அதேபோல் சதீஷ்குமார் தனது தம்பி சந்தோஷ் குமார் மற்றும் காசிமேடு பகுதியை சேர்ந்த லோகேஷ் ஆகிய இருவரையும் வைத்து சம்பவத்தன்று ராஜீவுக்கு போன்போட்டு பணம் தருவதாக கூறி வர வைத்து வெட்டியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காசிமேடு பகுதியை சேர்ந்த லோகேஷை(19) கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி சதீஷ் குமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட விஷ்வா மற்றும் லோகேஷ் மீது வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Updated On: 2 March 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!