/* */

சாென்னதை செய்யணும் : இல்லையென்றால், ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் ஸ்டாலின் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சாென்னதை செய்யணும் : இல்லையென்றால், ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை
X

பைல் படம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மீனவர் பிரிவு சார்பில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை நிறைவேற்றவில்லை எனவும், காலம் காலமாக நிலைத்து நிற்பதற்காக மட்டுமே வாக்குறுதிகள் வழங்கப்படுகிறது. ஆனால், ஒரு குடும்பம் ஆட்சியமைப்பதற்காக வாக்குறுதியை வழங்கியுள்ளது.

மீனவர்களுக்காக, டீசல் மாணியம் 1800 லிட்டரிலிருந்து 2 ஆயிரம் லிட்டராக உயர்த்தி வழங்கப்படும், மழைக்காக நிவாரண தொகை 5 ஆயிரத்திலிருந்து 6ஆயிரமாகவும் உயர்த்தி வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக நிறைவேற்றவில்லை என கூறினார்.

தேர்தல் வாக்குறுதியாக அறித்ததை விரைவில் நிறைவேற்றவில்லையென்றால் முதல்வர் ஸ்டாலின் இல்லம் முன்பு பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும். மீனவர்களுக்கு தொடர்ந்து துணை நிற்பது பாஜக மோடி மட்டுமே கடந்த 7 ஆண்டுகளில் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதா?

ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் 400க்கும் மேற்பட்டவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதுபோன்று மீனவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பது பாஜக அரசு தான். ஆனால் தவறான பிரச்சாரங்களை மீனவர்களிடம் செய்கின்றனர் என குற்றம்சாட்டினார்.

மத்திய இணையமைச்சர் முருகன் விரைவில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கோண்டு, மீனவர்களின் பிரச்சினைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். இதனை தொடர்ந்து திமுகவை கண்டித்து பதாகைகள் ஏந்தி பாஜகவினர் முழக்கமிட்டனர்.

Updated On: 31 July 2021 1:39 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  2. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  3. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  5. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  6. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  7. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  8. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  10. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !