/* */

சென்னையில் ஒரே மேடையில் பேசிய முன்னாள் முதலமைச்சர்கள்

சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் முதலமைச்சர்கள் ஒரே மேடையில் பேசினர்.

HIGHLIGHTS

சென்னையில் ஒரே மேடையில் பேசிய முன்னாள் முதலமைச்சர்கள்
X

சென்னை சேத்துப்பட்டில் அதிமுக சார்பாக நடந்த கிறிஸ்துமஸ் விழா

அதிமுக சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ' ஏழைகளின் சிறிய சகோதரிகள் முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காப்பகத்தில் உள்ள முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் , சக்கர நாற்காலி வாங்குவதற்கான உதவித் தொகை உள்ளிட்டவற்றை வழங்கிய பிறகு இருவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கூறி மேடையில் பேசினர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது.

தமிழகத்தில் கல்வி , நவீன மருத்துவத்தை அறிமுகப்படுத்தியது கிறிஸ்தவர்கள் அதிமுக சாதி மதம் அற்ற , ஏழைகளுக்காக உதவும் கட்சி , ஜெயலலிதா அவர்களே கிறிஸ்தவ பள்ளியில் பயின்றவர்தான். கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை சொல்லி வளர்க்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது.

வர இருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் புது வாழ்வு தரும் புத்தாண்டாக அமைய வேண்டும். அதிமுகவில் கிளைக் கழகம் தொடங்கி உறுப்பினர்களாக உள்ள அனைவருமே மக்களுக்கான பணியாளர்கள்தான்.

அதிமுகவை மனிதாபிமானமுள்ள கட்சியாக உருவாக்கி தூய வாழ்வு வாழ்ந்தவர்கள் எம்ஜிஆர் , ஜெயலலிதா. அவர்கள் வழியில் முடிந்தளவு நாங்களும் உதவிகளை செய்து வருகின்றோம்.

எம்ஜிஆர் காலத்தில் மதம் மாறிய கிறித்தவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது , ஜெருசலேம் புனித பயண திட்டத்தை தொடங்கி வைத்தார் , கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு அந்த பயணக் கட்டணத்தை குறைத்தோம்.

இன்றைய தினமலரில் வந்துள்ள மனம் திருந்துங்கள் எனும் கிறிஸ்துமஸ் குறித்த கதையை படித்தேன் என்று சொல்லி கதையை ஆரம்பித்தார். அதில் ஒரு பணக்காரருக்கு இரு மகன்கள் இருப்பர் , ஒரு மகன் உழைப்பாளி மற்றொருவன் ஊதாறி .

ஊதாறி மகன் , தந்தையின் சொத்தில் தனது பங்கை ஆடம்பரமாக செலவு செய்தான். பின்பு எல்லாவற்றையும் இழந்து ஒரு விவசாயியின் வீட்டில் பன்றி மேய்த்தான்.விவசாயி அவனுக்கு முறையாக உணவு வழங்கவில்லை , பசி தாங்காத ஊதாறி மகன் , தனது தந்தை சொல் கேளாததை நினைத்து கண்ணீர் விட்டு அழுது பின்பு தந்தையிடம் திரும்பி வந்தான். ஊதாறி மகன் திரும்பியதை நினைத்து தந்தை மகிழ்ந்தார் , ஆனால் மூத்த மகன் கடிந்து கொண்டார் என கதை முடிகிறது.

நல்லவர்களை காக்க பூமிக்கு வரவில்லை , பாவம் சுமந்தோரை மனம் திருந்த செய்வதற்காகவே வந்தேன் என ஏசிநாதர் கூறியுள்ளார். தவறு செய்து மனம் திரும்பி வந்தவரை , மன்னித்து ஏற்க வேண்டும் என்பதே நல்ல தலைமை என்று தெரிவித்தார்.

ஓ.பன்னீர் செல்வம் பேசி முடித்தவுடன் மைக்கை வாங்கிய எடப்பாடி பழனிசாமி, தான் பேசும்போது எதிர்கட்சித் துணைத்தலைவர் பெயரை கூற மறந்துவிட்டதாகவும் , நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அவருக்கு மனமாற நன்றி தெரிவிப்பதாகவும் கூறி அமர்ந்தார்.

Updated On: 20 Dec 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  5. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  7. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  8. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  9. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  10. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு