/* */

+2 தேர்வு: அனைத்து கட்சி எம்எல்ஏக்களிடம் நாளை கருத்து கேட்பு-அமைச்சர்

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நாளை அனைத்து கட்சி எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

HIGHLIGHTS

+2 தேர்வு: அனைத்து கட்சி எம்எல்ஏக்களிடம் நாளை கருத்து கேட்பு-அமைச்சர்
X

அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காட்சி.

சென்னை தலைமைச்செயலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கல்வியாளர்கள் ஆகியோருடன் பிளஸ் டூ தேர்வு நடத்துவது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்தாலலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக அமைச்சர் என்ற முறையில் நாளை மதியம் 12 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக அனைத்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்களுடனும், மன நல நிபுணர்கள் உடனும் நாளை கலந்தாலோசிக்க உள்ளேன்.

பல்வேறு மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை ரத்து செய்துள்ளன. மத்திய அரசு சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முறைகளை ரத்து செய்துள்ளது. எனவே மதிப்பெண் கணக்கிடும் முறை உள்ளிட்டவை குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

திடீரென தேர்வு என்று அறிவித்தால் மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். எனவே தேர்வு அறிவிக்கப்பட்டால் உரிய கால அவகாசம் வழங்கப்படும். மாணவர்களுக்கு எந்தவித பாதகமுமின்றி முடிவு எடுக்கப்படும். ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக உள்ளது.7ம் தேதி முதல்வரின் ஒப்புதலுக்கு பிறகு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றார்.

Updated On: 4 Jun 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  2. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  5. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  8. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  9. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  10. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...