/* */

அனுபுரம் வியாபாரிகள் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

அனுபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

அனுபுரம் வியாபாரிகள் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி
X

அனுபுரம் கிளை சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நெய்க்குப்பி ஊராட்சி அனைத்து வியாபாரிகள் சங்கம், அனுபுரம் கிளை சார்பில், சங்க தலைவர் என்.கே. சங்கர் தலைமையில், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செயலாளர் ஜெ.சி.பி குமார், சங்க கௌரவ தலைவர் ஜெகதீசன், பொருளாளர் விஜயபாஸ்கர், நெய்க்குப்பி ஊராட்சி மன்றத் தலைவர் அர்ஜூனன், துணைத்தலைவர் என்.என்.கதிரவன், ஒன்றியக்குழு உறுப்பினர் சஞ்சய், காப்பாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், கொரோனா கால கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக , இனிப்புடன் பட்டாசு, துணி உள்ளிட்ட பொருட்களை வழங்கியதோடு, கொரோனா கால கட்டத்தில் இறந்த வணிகர்களின் குடும்பத்திற்கு நிதி உதவியும் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, சங்கம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனுவினை வழங்கினர். அதில், ஊராட்சிக்கு உட்பட்ட முக்கிய சந்திப்புகளில், நாற்புற ஒளிரும் விளக்கு அமைக்க வேண்டும்; ஊராட்சியில் மக்கள் தொகை அதிகமாவதால், திருட்டு சம்பவம் நடைபெறாமல் இருக்க, துணை காவல் நிலையம் அமைக்க வேண்டும்; ஒவ்வொரு பகுதிகளிளும் சிசிடிவி கேமரா பொறுத்துவதற்கும், அணு ஆற்றல் நிலையத்தில் வேலைவாய்ப்பில், நமது ஊராட்சியில் உள்ள இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மனுவினை பெற்று கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜூனன், துணைத்தலைவர் என் என் கதிரவன் கவுன்சிலர் சஞ்சய் ஆகியோர், மனுவில் உள்ள அனைத்து கோரிக்கைகளும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி தியாகு, ரங்கநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

Updated On: 2 Nov 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  2. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  4. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  7. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  8. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  9. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  10. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு