/* */

தாம்பரம் மாநகராட்சி சந்திக்கும் முதல் நகர்புற உள்ளாட்சி தேர்தல்: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

தாம்பரம் மாநகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களின் எதிர்பார்ப்புகள்

HIGHLIGHTS

தாம்பரம் மாநகராட்சி சந்திக்கும் முதல் நகர்புற உள்ளாட்சி தேர்தல்: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
X

சென்னை அடுத்துள்ள தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் நகர்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது. 87.64 சதுர.கிமீ கொண்ட பகுதியாகும், ஆண் வாக்காளர்கள் - 3,80,393, பெண் வாக்காளர்கள் - 3,84,251, பிற வாக்காளர்கள் - 87 என மொத்தம் - 7,64,731 வாக்காளர்களை கொண்டுள்ளது. 70 வார்டுகளை உள்ளடக்கிய 5 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் எதிர்பார்ப்புகள்:-

1), மாநகராட்சியில் இணையதளம் மற்றும் செயலியை உருவாக்க வேண்டும்.

2), அடிப்படை தேவைகளான சாலை வசதி, குடிநீர், பாதாள சாக்கடைத் திட்டம், மின்விளக்கு அமைத்தல் ஆகியவற்றை செய்து தர வேண்டும்.

3), குப்பை மேலாண்மையை மாநகராட்சியில் செயல்படுத்த வேண்டும், குப்பைகளை உரமாக்க வேண்டும்.

4), தாம்பரம் மாநகராட்சியில் பொது போக்குவரத்திற்காக, மாநகர் போக்குவரத்து கழகத்தை உருவாக்க வேண்டும்.

5), மாநகராட்சி பகுதியில் விளையாட்டு திடல் மற்றும் மருத்துவமனை கொண்டு வர வேண்டும்.

6), தாம்பரம் மாநகராட்சியில் உள்ள முக்கிய பிரதான சாலைகளான வேளச்சேரி பிரதான சாலை, ஜி.எஸ்.டி சாலையில் சைக்கிளில் சென்று உடற்பயிற்சி மேற்கொள்ள தனி பாதை உருவாக்கி தர வேண்டும்.

7), தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மக்களோடு தொடர்பு கொள்ளும் வகையில் தமிழக அரசு நல சங்கங்களோடு கமிட்டி அமைக்க வேண்டும்.

8), மாநகராட்சியின் வரவு செலவு கணக்குகளில் வெளிப்படை தன்மையாக, மாதம் அல்லது ஆண்டுதோறும் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

9), தாம்பரம் மாநகராட்சியில் ஏரிகள் அதிகம் இருப்பதால் அதில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

10), தாம்பரம் மாநகராட்சி மார்கெட் பகுதியில் சாலையோர கடைகாரர்களுக்கு வணிக வளாகம் கட்டித்தர வேண்டும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போதிய வாகன நிறுத்தத்தை ஏற்படுத்தி தர வேண்டும்.

தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டாலும் பெருங்களத்தூர், தாம்பரம், செம்பாக்கம், பம்மல், பல்லாவரம், அனாகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பொது மக்கள் தேர்தலை சந்திக்க உள்ளனர்.

Updated On: 3 Feb 2022 11:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!