/* */

சாலையோரம் எரிந்த 3 உடல்கள்; தொடருது திக் திக்.. போலீசார் திணறல்

அச்சிறுபாக்கம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

சாலையோரம் எரிந்த 3 உடல்கள்; தொடருது திக் திக்.. போலீசார் திணறல்
X

பைல் படம்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் அடுத்த தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலை அருகே வெட்டவெளி மைதானத்தில் எரித்து அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அச்சிறுபாக்கம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டது.

தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் எரிந்து அழகிய நிலையில் ஆண் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டனர். அழுகிய நிலையில் மீட்கப்பட்டது என்பதால் இந்த நபரின் வயது மற்றும் அடையாளங்கள் ஏதும் தெரியவில்லை,

மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுபோன்ற சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரத்தி காவல்துறை எல்லைக்குட்பட்ட சாலையோரம் எரிந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் எரிந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சலையின் ஓரம், தற்போது எரிந்து அழுகிய நிலையிலும், இதற்கு முன் எரிந்து நிலையில் 2 உடல்களும் கிடந்தது அச்சிரப்பாக்கம், மேல்மருவத்தூர் பகுதிகளில் திக் திக் மர்மமாகவே இருந்து வருகிறது. இந்த வழக்குகளின் குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 3 Aug 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மனதை நொறுக்கிய MI ! "7 தொடர் தோல்விகள்" !#mi #mumbaiindians...
  2. வீடியோ
    கோடை விடுமுறை கொடைக்கானலில் குவிந்த மக்கள் !#summer #holiday #vacation...
  3. வீடியோ
    Happy Birthday Ajithkumar 🥳🎂 !#ajithkumar #ajith #happybirthday...
  4. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  5. நாமக்கல்
    குரு பெயர்ச்சியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப
  6. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  7. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  10. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி