/* */

மதுராந்தகம்: கோழிப்பண்ணையில் 115 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

மதுராந்தகம் அருகே, கோழிப்பண்ணையில் தீவனத்துக்காக வைத்திருந்த 115 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

மதுராந்தகம்: கோழிப்பண்ணையில் 115 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
X

மாரிபுத்தூர் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணை.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாரிபுத்தூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை இயங்கி வருகிறது. இந்த கோழிப்பண்ணையில் ரேஷன் அரிசி கொதிக்க வைத்து, கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்துவது வழக்கமாக செய்து வந்துள்ளனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறைக்கு, ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில், ஏ.டி.ஜி.பி பாஸ்குமார் உத்தரவின்பேரில் அங்கு சென்ற குற்றப்புலனாய்வு போலீசார், கோழி பண்ணையில் சோதனை செய்தனர்.

போலீசார் தேடப்பட்டு வரும் கோழிப்பண்ணை உரிமையாளர் அப்துல்சமத்.

இச்சோதனையில், கோழி தீவனத்திற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5750 கிலோ அதாவது, 50 கிலோ எடை கொண்ட 115 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, மதுரை பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை கைது செய்தனர். மேலும் கோழிப்பண்ணை உரிமையாளரான, மதுராந்தகம் அப்துல்சமத் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 12 Sep 2021 7:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  2. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  3. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  5. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  6. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  7. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி