/* */

செங்கல்பட்டில் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்த இளைஞர்கள்: 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கியதால் ஏமாற்றம்

செங்கல்பட்டில் தடுப்பூசி போட ஆர்வத்துடன் இளைஞர்கள் வந்தாலும் 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கியதால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டில் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்த  இளைஞர்கள்: 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கியதால்  ஏமாற்றம்
X

செங்கல்பட்டில் தடுப்பூசி போடுவதற்காக வரிசையில் நிற்கும் பொதுமக்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மருந்து இல்லாததால் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. இதனை அறியாத இளைஞர்கள், முதியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள, மருத்துவமனைகளுக்கு சென்று ஏமாற்றுத்துடன் திரும்பினர்.

இந்நிலையில், மாவட்டத்திற்கு நேற்று கொரோனா தடுப்பூசி கொண்டுவரப்பட்டது. அதில் மாவட்டம் முழுவதுமுள்ள 43 இடங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி இன்று மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் இனறு இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கல்லூரியில் காலை 6 மணி முதலே இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

செங்கல்பட்டு, மறைமலைநகர், சிங்கப்பெருமாள்கோயில், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், உள்ளிட்ட மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 14 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்பட்டன. பல இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே சமயத்தில் குவிந்தனர். ஒவ்வொரு மையத்திற்கும் 500 முதல் 1000 வரை மட்டுமே மருந்துகள் அனுப்பப்பட்ட நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 டோக்கன்களும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 டோக்கன்களும் மட்டுமே வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.

இதன் காரணமாக செங்கல்பட்டில் நூற்றுக்கணக்கான இளைஞர்களும், முதியவர்களும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதலாக தடுப்பூசி வந்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

Updated On: 13 Jun 2021 8:37 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!