/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,165 காவல் அதிகாரிகள் நியமனம்

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,165 காவல் அதிகாரிகள், 4 பறக்கும் படைகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,165 காவல் அதிகாரிகள் நியமனம்
X

பைல் படம்.

ஊரக உள்ளாட்சித்த் தேர்தல் பாதுகாப்பு குறித்து, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு ஊராட்சி ஒன்றியங்களுக்குண்டான மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய ஒன்றிய கவுன்சிலர்/ தலைவர், வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு சம்மந்தமாக செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு பணிகளுக்காக சுமார் 1,165 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளரிநர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும் 4 பறக்கும் படைகளும் , 16 ரோந்து வாகனங்களும், 21 இருசக்கர ரோந்து வாகனங்களும், மாவட்ட எல்லை பகுதிகளில் சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 13ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் இத்தேர்தலை எந்தவித அச்சமுமின்றி நியாயமான முறையில் வாக்களிப்பதை உறுதி செய்யவும், தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது தகுந்த, நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட காவல் அலுவலகத்தில் முழு நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

தேர்தல் விதி மீறல்கள் இருப்பின் அவசர உதவிக்கு. 199 மற்றும் மாவட்ட காவல் உதவி எண் 7200102101 ஆகிய எண்களில் தொலைபேசி, அல்லது குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 17 Sep 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  2. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  4. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  5. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  7. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  8. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு