/* */

தமிழக அரசு ஆற்று மணலுக்கு அனுமதி அளிக்க வேண்டி, லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் காத்திருக்கும் போராட்டம்

தமிழக அரசு ஆற்று மணலுக்கு அனுமதி அளிக்க வேண்டி. லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தமிழக அரசு ஆற்று மணலுக்கு அனுமதி அளிக்க வேண்டி, லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் காத்திருக்கும் போராட்டம்
X

செங்கல்பட்டில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர்.

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏராளமான லாரிகளை நிறுத்தி தொடர் காலவரையற்ற காதிருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கலந்துகொண்ட அச்சங்கத்தின் தலைவர் யுவராஜ் கூறுகையில்:-

தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆற்று மணல் வழங்ககோரி தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வருகிறது.

ஆனால் நடந்து முடிந்த சட்டமன்றத் பொதுத்தேர்தலை காரணம் காட்டி, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஆன்லைன் மணல் விற்பனையை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நிறுத்திவிட்டனர்.

கடந்த நான்கு மாதங்களாக ஆற்று மணல் விற்பனை நடைபெறாத காரணமாக லாரி உரிமையாளர்கள் மணலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

லாரிகள் இயக்கப்படாமலேயே சாலை வரி, காப்பீட்டுவரி, செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கடன் தவணையும் செலுத்தமுடியாமல் லாரி உரிமையாளர்கள் நிதி நெருக்கடியில் தவிதுவருகின்றனர்.

லாரிகள் இயக்கப்படாத காரணமாக லாரி ஓட்டுநர்களும் வேலையிழந்துள்ளனர். ஏற்கனவே தொடங்கப்பட்ட கட்டுமான பணிகளும் பாதியிலேயே நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக கட்டுமான தொழிலும் முடங்கியுள்ளது.

கொரோனா தொற்றால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ. 100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் லாரி உள்ளிட்ட சரக்கு வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இவை அனைத்தையும் தமிழக அரசு கருத்தில்கொண்டு, ஆற்று மணலை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும் ஆற்று மணலை வழங்கிட காலதாமதமானால், தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் காத்திருக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்ட தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

Updated On: 8 July 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  5. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  6. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  7. ஈரோடு மாநகரம்
    தீ ரோடு ஆனது ஈரோடு! சுட்டெரிக்கும் வெயில்...
  8. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  9. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  10. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி