/* */

செய்வினை எடுப்பதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி: 3 பேர் கைது

செய்வினையை நிக்குவதாக கூறி 12லட்சம் மோசடி செய்த 3பேர் கைது. 6.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், கார், நகை பறிமுதல்.

HIGHLIGHTS

செய்வினை எடுப்பதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி: 3 பேர் கைது
X

அரியலூரில் செய்வினையை நீக்குவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளது என மொபைலுக்கு வந்த அழைப்பை நம்பி 12 லட்சத்தை இழந்து விட்டதாக அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தினார்.

இவ்வழக்கில் விசாரணை செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை சேர்ந்த வல்லவராஜ் (25), கிருஷ்ணன் @ தர்மராஜ் (24), செங்குன்றம், சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி, பேய் தலையன் @ சனியன் என்கின்ற குமார் (39) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் போலிசார் மேற்கொண்ட விசாரனையில், சேலம் மாவட்டம் எருமபாளையம் பேருந்து நிலையத்தில் வரும் பொதுமக்களிடம் கைரேகை பார்ப்பதாக கூறி கைரேகை பார்த்தவுடன் உங்களுக்கு தோஷம், செய்வினை உள்ளதாகவும் கூறி அவர்களின் மொபைல் நம்பரை பெற்று கொள்கின்றனர். பின்னர் மூன்று நபர்களும் சம்மந்தப்பட்ட நபர்களை தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு நீங்கள் பரிகாரம் செய்யவில்லை என்றால் உங்கள் வீட்டில் அசம்பாவிதங்கள் நடைபெறும் எனக்கூறி அச்சுறுத்தி உள்ளனர்.

இதுபோன்று அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமாருக்கு பில்லி சூனியம் இருப்பதாக கூறி கொல்லிமலைக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் அதற்கான தொகையை தனது வங்கி கணக்கில் அனுப்புமாறும் கூறியள்ளனர். இதனைத்தொடர்ந்து வங்கியின் மூலமாகவும் நேரடியாகவும் இதுவரை 12 லட்சம் ரூபாய் வரை விஜயகுமாரிடம் மோசடி செய்தது போலிசாரின் விசாரனையில் தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த சைபர் க்ரைம் காவல்துறையினர் மூவரிடம் இருந்தும் 6,30,000/- ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள், கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் நகையை பறிமுதல் செய்து. குற்றவாளிகள் மூவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Updated On: 6 April 2022 8:46 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...