/* */

மாவட்ட கலெக்டர் தலைமையில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

மாவட்ட கலெக்டர் தலைமையில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம்
X

பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக் கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில்  நடைபெற்றது

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், ஒட்டக்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில்நடைபெற்றது.

பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பேசியதாவது: தனியார் பள்ளிகளில் இருப்பதைப்போன்று அரசு பள்ளிகளிலும் பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் இனிமையான கற்றல் சூழ்நிலையை உருவாக்கும் வகையில் அரசு கொண்டு வந்துள்ள திட்டம் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு திட்டமாகும். குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகள் பயிலும் பள்ளியின் முன்னேற்றத்திற்கு தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க, நினைத்ததை செயல்படுத்த, ஒரு வாய்ப்பை தமிழக அரசு தற்பொழுது ஏற்படுத்தியுள்ளது.

இதனை பெற்றோர் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சுய விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்து, பொதுநோக்குடன் இத்திட்டத்தை எடுத்துச்செல்ல வேண்டும். குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். தற்பொழுது மாறி வரும் சூழ்நிலையில் அவர்களை நல்ல முறையில் வளர்க்க வேண்டிய பொறுப்பு தாய்மார்களுக்கு உள்ளது.

இப்பள்ளியிலுள்ள மேலாண்மைக்குழுவில் 100 சதவீதம் பெண்கள் இருப்பதற்கு வாழ்த்துகள். பெண்கள் பள்ளியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவதுடன் தங்கள் குடும்பம் மட்டுமின்றி அனைத்து குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் பள்ளியின் முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும். மாணவர்களின் முன்னேற்றம் என்பது இந்தியாவின் வளர்ச்சியாகும். அரியலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு தேவையான வசதிகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி

இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.இராமன், மாவட்ட கல்வி அலுவலர் இ.மான்விழி, ஊராட்சிமன்றத்தலைவர் செங்கமலை, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சி.வேம்பு, துணைத்தலைவர் செ.பத்மாவதி மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 23 April 2022 2:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!