/* */

சிமெண்ட் ஆலையில் வேலை கேட்டு செந்துறை அருகே கிராம மக்கள் மறியல்

படித்த இளைஞர்களுக்கு, தனியார் சிமெண்ட் ஆலையில் வேலை வழங்கக்கோரி, செந்துறை அருகே கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சிமெண்ட் ஆலையில் வேலை கேட்டு செந்துறை அருகே கிராம மக்கள் மறியல்
X

அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் தனியார் சிமென்ட் ஆலை நிர்வாக அலுவலர்கள்.


அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள ஆதனக்குறிச்சி ஊராட்சி புதுப்பாளையம் கிராமம். இங்குள்ள மக்கள், அப்பகுதியில் இயங்கி வரும் தனியார் சிமென்ட் ஆலையில், படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அரசு விதிமுறைகளை மீறி அதிகளவு ஆழத்தில் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கக்கூடாது. காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூடி நிலமற்ற மக்களுக்கு வழங்க வேண்டும்.

மாதம் ஒரு முறை மாசு கட்டுப்பாட்டு சோதனை செய்ய வேண்டும். அப்பகுதியில் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் சிமென்ட் ஆலை எடைபாலம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஆலை நிர்வாக அலுவலர்களிடம் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தனர். பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.

Updated On: 18 Jan 2022 12:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!