/* */

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள் மூலம் தங்களது பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்தனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
X

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்று கொள்ளும் மாணவர். 

தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கொரோனா காரணமாக மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்யப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 மதிப்பெண் செய்முறை, உள்மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு கணக்கிடப்பட்டு, கடந்த 19-ந்தேதி அரசின் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிகள் மூலம் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது.

மாணவ-மாணவிகள் பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை நேற்று முதல் அரசின் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை 11 மணி முதல் அரசின் இணையதள முகவரியில் அரியலூர் மாவட்டங்களில் நகர்ப்பகுதியில் வசிக்கும் மாணவ-மாணவிகள் தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகிய விவரத்தை பதிவு செய்து பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொண்டு, நகல் எடுத்து கொண்டனர்.

ஆனால் கிராமப்புறங்களில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு சரியான இணையதள வசதியும், நகல் எடுக்கும் வசதியும் இல்லாததால், அவர்கள் பயின்ற பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள் மூலம் தங்களது பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்து நகல் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை, அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும் வரை உயர்கல்வி சேருவதற்கு மாணவ-மாணவிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


Updated On: 23 July 2021 6:26 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்